முக்கியச் செய்திகள்

 



இந்திய வம்சாவளி மாணவி தேர்வு:


டைம் இதழின் இந்த ஆண்டிற்கான சிறந்த சிறுமியாக இந்திய வம்சாவளி மாணவி கீதாஞ்சலி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

___________________________

ஜனவரி 15ஆம் தேதிக்குள்:


அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்படி ஜனவரி 15ஆம் தேதிக்குள் சோமாலியா நாட்டிலிருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதாக பென்டகன் அறிவித்துள்ளது.

______________________

அதிரடி உத்தரவு:


அமெரிக்காவில் சீனர்களுக்கு மேலும் விசா கட்டுப்பாடுகளை விதித்து டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

______________________


டெல்லியில் புதியதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி வரும் 10ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.

++++++++++++++++++++++++++++

கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்:


தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் உதவியாளர்கள் அரசு பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

___________________________

ஆலோசனை கூட்டம்:


புரெவி புயல் காரணமாக பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. 

__________________________

வானிலை ஆய்வு மையம்:


இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

_____________________________

தமிழக முதல்வர் அறிவிப்பு:


புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

_________________________

வெள்ள அபாய எச்சரிக்கை:


விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் உள்ள 12 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

_______________________________

நாளை காலை முதல் வரும் 13 ஆம் தேதி இரவு வரை:

சென்னை குடிசைப்பகுதிகளில் வசிக்கும் 5.3 லட்சம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 26 லட்சம் ஏழை மக்களுக்கு, நாளை காலை முதல் வரும் 13ஆம் தேதி இரவு வரை 3 நேரமும் உணவு சமைத்து வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

______________________________

கடும் வெள்ளப்பெருக்கு:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

_________________________

விளையாட்டுச் செய்திகள்

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி:


இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் நார்த்