ரஜினிகாந்த்தை அரசியலில் தோற்கடிக்க வேண்டும் என ஏற்கெனவே கூறியிருந்த நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது தனது கருத்துக்காக ரஜினிகாந்த் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தனது கருத்துக்காக ரஜினிகாந்த் குடும்பத்தினரிடமும், ரசிகர்களிடமும் வருத்தம் தெரிவித்த சீமான்.
ரஜினிகாந்த் அரசியல் வருவேன் என்றும் வரும் 31ஆம் தேதி அது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறினார். அப்போது நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினிகாந்த்தை அரசியலில் தோற்கடிக்க வேண்டும் என பல்வேறு கருத்துகளை கூறியிருந்தார்.
நடிப்பு மட்டுமே நாட்டை ஆள தகுதி இல்லை என்றும், எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் இந்த நாட்டுக்கு தேவையில்லை எனவும் சீமான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் தனது உடல்நிலை காரணமாக, தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்களும் தமிழக மக்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானர்.
மேலும் பெரும்பால அரசியல் கட்சி தலைவர்களும் ரஜினியின் இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ரஜினிகாந்த்தை அரசியலில் தோற்கடிக்க வேண்டும் என ஏற்கெனவே கூறியிருந்த நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது தனது கருத்துக்காக ரஜினிகாந்த் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.