சூறையாடப்பட்ட நிறுவனம் ! துணைத்தலைவரை நீக்கம் செய்வதாக அறிவிப்பு

 



விஸ்ட்ரான் நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை ஊழியர்கள் அடித்து நொறுக்கிய நிலையில் ,சம்பள விவகாரத்திற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளது.

தைவான் நாட்டின் விஸ்ட்ரான் நிறுவனம் கர்நாடகா மாநிலத்தில் கோலாா் மாவட்டத்தில் உள்ள நரசாபுரா தொழிற்பேட்டையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்  செல்போன்களை  உற்பத்தி செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் 5000 -க்கும் மேற்பட்டோர் ஊழியர்கள் வருவதாகக் கூறப்படுகிறது.இந்த 5000 பேரில் , 2000 பேர்  ஒப்பந்தப் ஊழியர்கள் ஆவார்கள்.ஆனால் ஊழியர்களுக்கு கடந்த  சில மாதங்களாக முறையாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆகவே இது குறித்து விஸ்ட்ரான் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த சமயத்தில் ஊழியர்கள் தொழிற்சாலையை அடித்து நொறுக்கினார்கள். மேலும் அங்கிருந்த கணினிகள், மடிக் கணினிகள் ,வாகனங்கள் என அனைத்தையும் உடைத்து நொறுக்கினார்கள்.

இது குறித்து போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் வன்முறையில் ஈடுபட்டதாக ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.