மார்கழி மாதம் -ஒரு பார்வை

 


சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். சூரியன் தனு இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 20 நாடி, 53 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். 

குளிர் காலத்தின் துவக்கமாக மார்கழி மாதம் கருதப்படுகிறது. பூமியின் வடகோளப்பகுதியில் உள்ளோருக்கு திசம்பர், சனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர்காலங்களாகும். குளிர்காலத்தின் துவக்கம் திசம்பர் 21 - 22 தேதிகளில் துவங்குகிறது.

குளிர்காலத்தின்போது துருவப்பகுதிகள் மிகக் குளிர்ந்து இருக்கும். அங்கு சில மாதங்கள் சூரியனைத் தொடர்ந்து காண முடியாது. அப்போது வறண்ட குளிர்காற்று அந்தப் பகுதியிலிருந்து தெற்குப்பகுதி நோக்கி வீசத் துவங்கும். 

ஆகையால் தென்பகுதிகளின் வானிலை வெப்பநிலை மற்றும் பகற்பொழுதின் அளவும் மாறுபடத் துவங்குகின்றன. பூமத்திய ரேகையை ஒட்டிய வெப்பமண்டல பிரதேசங்களில் நிலவும் வெப்பநிலையில் அதிக மாறுதல் ஏற்படுவதில்லை என்றாலும், மழை பொழிவின் காரணமாக சில பகுதிகளில் ஈரமிக்கதாகவும் மற்றபகுதிகளில் வறண்டும் காணப்படும்

மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். 

இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. 

திருவெம்பாவை விரத காலத்தில் சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டும் ஆலயங்களுக்குச் செல்வர். 

விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர். இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.

மார்கழியில் ஏன் திருமணம் செய்யக் கூடாது ; அப்படி செய்தால் என்ன நடக்கும் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..!

மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என இறைவனை அடையக் கூடிய இரு பெரிய விழாக்கள் வருகின்றன. மார்கழி மாதம் என்றால் அது பீடை மாதம் என பலர் சொல்வதுண்டு. ஆனால் அப்படி அல்ல அது ஒரு தெய்வீகமான மாதமாகும். அதனால் தான் பகவான் கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கின்றேன் என கூறியுள்ளார்.

மாதங்களில் உயர்ந்த மாதம் மார்கழி. இந்த மாதத்தில் எவ்வளவோ சிறப்புகள் உண்டு. பொதுவாக இந்த மாதத்தில் விதை விதைக்கக் கூடாது என்பார்கள். ஏனெனில் இது விதை விதைப்பதற்கான காலம் அல்ல. விதை வளர்வதற்கான காலம்.

இந்த மாதத்தில் விதைத்தால், விதை சரியான உயிர் தன்மையற்று வளராமல் போய்விடும் என்ற காரணத்திற்காகத் தான் மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது ஏன சொல்கின்றனர்.

ஆடி மாதம் போல, மார்கழி மாதம் இறைவனுக்குரிய மாதம். இறைவனை வணங்க வேண்டிய மிக அற்புத மாதம் என்பதால் திருமணம் செய்யப்படுவதில்லை.

அதிகாலை விழித்தல்:

மார்கழி மாதத்தில் அதிகாலை எழுவது மிகவும் நல்லது. அதிகாலை என்றால் எத்தனை மணி என பலரும் கேட்பார்கள். அதாவது சூரிய உதயத்திற்கு முன் பிரம்ம முகூர்த்தமான 4.30 மணிக்கு எழுந்து நீராட வேண்டும்.

மார்கழி மாதத்தில் இந்த நேரத்தில் இயற்கையாகக் கிடைக்கக் கூடிய அதீத ஆக்ஸிஜன் நம் உடலுக்கு ஆண்டு முழுவதும் தேவையான நலனை தர வல்லது.

இதனால் தான் மார்கழி மாதம் அதிகாலை குளித்துவிட வேண்டும். சூரிய உதயத்திற்குப் பிறகு குளிக்கக் கூடாது என சொல்லப்படுகின்றது.

கோலம் போடுதல்:

மார்கழி மாதத்தின் சிறப்பாக, கோலம் உள்ளது. இந்த கோலம் இரவே போடக் கூடாது. அதிகாலை தான் போட வேண்டும். நாம் இரவே குளித்து அலுவலகத்திற்கு செல்வது போல உடை அணிந்து தூங்கி எழுந்து அப்படியே அலுவலகம் செல்ல முடியுமா? முடியாதல்லவா... அது போல தான் கோலமும் அதிகாலை தான் போட வேண்டும். இரவே போட்டு வைக்கக் கூடாது.

கோலம் என்பது வெறும் அழகிற்கானது அல்ல. கோலம் என்பது ஒரு வகை தர்மம்.


பஜனை:

பஜனை செய்பவர்கள் இருந்தால், அந்த பஜனை செய்யக் கூடியவர்களுடன் சேர்ந்து சென்று பாஜனை செய்ய வேண்டும். அதன் பின்னர் திருப்பாவை, திருவெண்பாவை படிக்க வேண்டும். மார்கழி மாதம் 30 நாட்களும் இந்த திருப்பாவை, திருவெம்பாவையை பாட வேண்டும்.

திருமாலை அடைந்த கோதை நாச்சியார் அருளிய திருவெண்பாவையும், சிவமே மாணிக்க வாசகமாக உருவாகி, அவர் அருளிச்சென்ற திருவெம்பாவையை திருப்பள்ளி எழுச்சி இவற்றை மார்கழி மாதத்தில் கண்டிப்பாகப் படிக்கவோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். இப்படி பாடினால் அல்லது கேட்டால் புண்ணியம் உண்டாகும்.

வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்


பக்திக்கு உரிய மாதம், பணிவாக இறைவனை அடையக் கூடிய மாதம், வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் போன்ற மிக அருமையான இறைவனின் அருளைப் பெறக் கூடிய கொண்டாட வேண்டிய மாதம் இந்த மார்கழி மாதம்.

இதன் காரணமாக மார்கழி மாதத்தில் தினமும் காலை நீராடி, வீட்டில் இறைவனை வணங்கி விட்டு, அருகில் உள்ள திருமால் அல்லது சிவன் கோயிலுக்குச் சென்று வணங்கி வருவது மிகச்சிறந்த இறை அருளை பெறலாம்.



 தொகுப்பு: மோகனா செல்வராஜ்