தலைநகர் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் விவசாயிகளுடன் இணைந்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு தனியாருக்கு ஆதர வாகக் கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டம், மின்சார திருத்தச் சட் டம் 2020 ஆகிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆத ரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் இயக்கங்களை முன்னெ டுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மின் ஊழி யர்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து ஞாயிறன்று உதகை மசின குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.வாசு தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சுந்தரம், மின் ஊழியர் மத்திய அமைப்பின் சிங்காரா கிளைத் தலைவர் சாலி, செயலாளர் ராமகிருஷ்ணன், குந்தா கிளை தலை வர் எம்.முரளிதரன், செயலாளர் எஸ். முரளிதரன், விவசாயிகள் சங்க நிர் வாகிகள் நரசிம்மன், பாலசுப்பிர மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.
தருமபுரி
தருமபுரி மாவட்டம், அரூர் பிடிஒ அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஈடுபட்டனர். அதில், சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் சி.சதீஸ், வட்ட தலைவர் செந்தமிழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.