பெலகாவி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், முஸ்லீம் வேட்பாளருக்கு பாஜ கட்சி சீட் வழங்காது என்று கர்நாடக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் பெலகாவியில், அமைச்சர் ஈஸ்வரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பெலகாவி மாவட்டம், இந்துத்துவாவின் மையங்களில் ஒன்றாகும். ஆகையால் நடைபெறவிருக்கும் பெலகாவி மக்களவை இடைத்தேர்தலில், இந்துவை சேர்ந்த வகுப்பினருக்கு பாஜ க சார்பில் சீட் வழங்கப்படும்.
ஆனால் முஸ்லிம்களுக்கு கண்டிப்பாக வழங்கப்படாது’’ என்று தெரிவித்தார். இவரின் கருத்துக்கு எதிர்க்கட்சி சார்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் கூறுகையில், ‘‘பாஜவினருக்கு அரசியலமைப்பு பற்றிய அறிவு கிடையாது. அரசியல் அமைப்பை மதிக்கவும் அவர்களுக்கு தெரியாது. அரசியலமைப்பை படித்து அதன் நோக்கங்களை புரிந்து கொள்ளவேண்டும். அது போல நடந்து கொள்ள முடியவில்லை என்றால் பாஜ க தங்கள் கட்சியில் உள்ள சிறுபான்மை பிரிவை அகற்றுவது சிறந்தது’’ என்றார்.