தனிமையில் இருக்கும் நடிகர் சிவகுமார்

 




நடிகர் சிவகுமார் கடந்த ஒரு வாரமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.


தமிழகத்தில் கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு காலத்தில் விறுவிறுவென ஏறிய பாதிப்பு எண்ணிக்கை தற்போது பல மடங்கு குறைவாக உள்ளது. உயிரிழப்பும் ஒன்றை இலக்கத்திற்கு வந்துவிட்டது.


மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவே கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. ஆனாலும் தொற்று முழுமையாக சரியாகவில்லை. ஆங்காங்கே வைரஸ் பாதிப்பு ஏற்படுவது தொடர்கிறது.


அந்த வகையில் நடிகர் சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தன்னை சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் ஒரு வாரமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


அவருக்கு அறிகுறி ஏதும் இல்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிகிறது. அவர் நலமுடன் உள்ளார். மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.