2020 - 2023 வருடத்திற்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்
மேஷம்
நம்பிக்கையுடன் செயலில் இறங்கும் மேஷ ராசி அன்பர்களே, சூழலுக்கேற்ப பேசியும் செயல்பட்டும் வெற்றிவாகை சூடுபவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் கையில் காசு தங்காமல் கடன் பிரச்னைகளாலும், மனக் கவலைகளாலும் கலங்கடித்த சனிபகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரையிலும் 10-ம் வீட்டில் அமர்கிறார். ஆகவே நல்லதே நடக்கும்.
சனி பகவான் மேஷம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமரப்போவதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும் . ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும் . புது வேலை கிடைக்கும் . பதவியில் புது உற்சாகம் கிடைக்கும் .
சனியால் கொடுக்கும் பதவி , சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது . திருமணம் நடக்கும் , குழந்தை பாக்கியம் கிடைக்கும் . கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும் . கோடீஸ்வர யோகம் வரப்போகிறது . சனி கொடுப்பதை பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள் .
ரிஷபம்
மற்றவர்களின் குறைகளை நீக்கிவிட்டு, நிறைகளை மட்டும் எடுத்துக் கொண்டு எப்போதும் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளும் ரிஷப ராசிக்காரர்களே, இதுவரை அட்டமத்தில் நின்று கொண்டு உங்களைப் படாதபாடு படுத்திய சனிபகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை 9 வது வீட்டில் அமர்ந்து நல்லதைச் செய்யப் போகிறார்.
சனியால் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக படாத பாடு பட்டிருப்பீர்கள் . அஷ்டம சனி முடிந்து பாக்கிய சனி தொடங்குகிறது . சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும் . பணவரவு அதிகரிக்கும் . அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள் .
நிறைய தர்மங்களை செய்யுங்கள் . ஏனெனில் இது தர்ம சனி காலம் . வேலையில் சம்பள உயர்வு, உயர்பதவி கிடைக்கும் , தொழிலில் லாபம் அதிகரிக்கும் . நகை , பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும் .
மிதுனம்
பழகியவர்களிடம் மனம்விட்டு பேசுகிற மிதுன ராசி அன்பர்களே... ஒரு போதும் மதியாதார் வாசலை மிதிக்கமாட்டீர்கள். அப்படிப்பட்ட வைராக்கியம் கொண்ட உங்களின் ராசிக்கு இதுவரை 7 ம் வீட்டில் அமர்ந்து பலன் தந்துகொண்டிருந்த சனிபகவான் இப்போது 8 ம் வீட்டில் சென்று அமர்கிறார். வழக்கமாக அஷ்டமத்து சனி என்றால் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமே தவிர பயம் கொள்ளத் தேவையில்லை. காரணம் சனிபகவான் மிதுன ராசியின் நட்புகிரகம் என்பதால் பெரும் துன்பங்கள் ஏற்படாதவாறு சனிபகவான் உங்களைக் காத்தருள்வார்.
சனிபகவான் இதுநாள் வரை கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களைக் கொடுத்தார் இனி எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார் . எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும் .
இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும் . திடீர் பணவரவு கிடைக்கும் . கஷ்டமில்லாமல் இந்த 30 மாதங்களை கடந்துவிடுவீர்கள்.
கடகம்
கடின உழைப்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்கூடிய கடக ராசி அன்பர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மிகவும் முக்கியமான பல மாற்றங்களைக் கொண்டுவர இருக்கிறது. இதுவரை உங்கள் ராசிக்கு 6 - ம் வீட்டில் அமர்ந்து எல்லா வகையில் முன்னேற்றத்தையும், அடிப்படை வசதி, வாய்ப்புகளையும் அதிகரிக்க வைத்த சனிபகவான், நாடாளுபவர்களின் நட்பையும், வேற்று மதத்தினர்களின் அறிமுகங்களையும் கிடைக்கச்செய்தார்.
இதுநாள் வரை ஆறாம் வீட்டில் அமர்ந்து உங்களை ஆகா ஓஹோ என்று வாழ வைத்தவர் சனி பகவான் . எண்ணற்ற வருமானங்கள் , செல்வங்களை கொடுத்து வந்தார் . இனி சனிபகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமரப்போகிறார் .
சனிபகவான் உங்க ராசியை பார்ப்பதால் கண்டச்சனியையும் கஷ்டமில்லாமல் கடந்துவிடுவீர்கள் . வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் . விசா கிடைக்கும் . சனி மிகப்பெரிய யோகம் , வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் . திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும் .
சிம்மம்
மனதை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொண்டு மற்றவர்களை நேர்மறை எண்ணங்களுடன் பார்க்க கூடிய சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுவரை உங்கள் ராசிக்கு 5 - ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எந்த வேலையையும் செய்யவிடாமல் பலவேறு தொல்லைகளையும், கஷ்டங்களையும் கொடுத்து வந்த சனிபகவான் தற்போது 6 ம் வீட்டுக்கு இடம்பெயர்கிறார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல், சாதகமாக முடியவேண்டிய சில வேலைகள்கூடப் போராடி முடிக்கவேண்டியதாக இருந்த சூழ்நிலை மாறும். கடன் பிரச்னையால் உங்களை வாட்டியெடுத்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் 6 ம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகத்தை அள்ளித்தருவார்.
சனி பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார் . உங்கள் ராசி அதிபதிக்கு எதிரியாகவே இருந்தாலும் சனி ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார் .
சனி பகவான் தனது சொந்த வீட்டுக்கு வருவதால் நோய்கள் . தீரும் . கடன்கள் கட்டுப்படும் . அசையா சொத்துக்களை வாங்குவீர்கள் . திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும் . புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் தொட்டும் . இனி இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு ராஜயோக காலம் . சுகங்கள் தேடி வரும் . செல்வமும் செல்வாக்கும் கூடும் .
கன்னி
இருப்பதை வைத்து கொண்டு சந்தோஷமாக வாழ நினைக்கும் கன்னிராசி அன்பர்களே இதுவரை உங்கள் ராசிக்கு 4 - ம் வீட்டில் அமர்ந்து நாலாவிதத்திலும் உங்களை சின்னாபின்னமாக்கிய சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலகட்டங்களில் உங்கள் ராசிக்கு 5 ம் வீடான பூர்வபுண்ணியஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வதால் நல்லதே நடக்கும்.
கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்த நீங்கள் , விபத்துக்களை சந்தித்த உங்களுக்கு துன்பங்களில் இருந்த விடிவுகாலம் பிறப்போகிறது . பூர்வஜென்ம புண்ணியங்களை கொண்டு வந்து அறுவடை செய்வீர்கள் . நல்லது அதிகம் நடக்கும் .
சனி உங்க ராசிக்கு ஆறுக்கு உடையவர் ஐந்துக்கு உடையவர் என்பதால் வேலையில் இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் திருமண தடைகள் நீங்கும் . வீடு , வாகனம் வாங்குவீர்கள் . சிலருக்கு நன்மை தரும் இடமாற்றம் நடைபெறும் . இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது . பணவரவு அதிகமாகவே இருக்கும் தொழில் வளர்ச்சி பெறும்.
துலாம்
நியாயத்துக்கு குரல்கொடுத்து அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் துலாராசி அன்பர்களுக்கு இதுவரை ராசிக்கு 3 - ம் வீட்டில் அமர்ந்து நற்பலன்களையும் மதிப்பு, மரியாதையும் தந்து கொண்டிருந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை சுக வீடான 4 - ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். கொஞ்சம் அலைச்சல் இருக்கத் தான் செய்யும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை பெறுவீர்கள். ஏனென்றால் சனிபகவான் ஆட்சிப் பெற்று அமர்கிறார்.
துலாம் ராசியில் சனிபகவான் உச்சமடைபவர் என்பதால் உங்களுக்கு எந்த கெடுதலும் செய்யமாட்டார் . நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இருக்காது .
சனியின் பத்தாவது பார்வை உங்க ராசி மீது விழுவதால் தொழில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் . வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும் . வீடு , கார் என வாங்குவீர்கள் . பணவரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் நோய்களும் வெளிப்படும் . நோய்களை குணப்படுத்துவீர்கள் . தனவரவு அதிகரிக்கும் . ஆசைகளை குறிக்கோள்களை சனி நிறைவேற்றுவார் .
விருச்சிகம்
எப்பொழுதும் அடுத்தவர்களை வாழ வைத்து அவர்களை சந்தோஷப்படுத்தி அதில் அழகு பார்க்கும் விருச்சிக ராசி அன்பர்களே... ஏறக்குறைய எட்டு ஆண்டுகளாக உங்களை சனிபகவான் ஆட்டிப்படைத்தார். அதிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக 2 - ம் வீட்டில் அமர்ந்து பேச்சால் பல பிரச்னைகளில் சிக்க வைத்து உங்களைக் கேலிக்குள்ளாக்கி, கேள்விக்குறியாக்கிய சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்களை விட்டு விலகி 3 - ம் வீட்டில் அமர்வதால் தொட்டதெல்லாம் துலங்கும்.
கால புருஷனுக்கு எட்டாவது ராசி . ஏழரை ஆண்டுகாலமாக சனி . விருச்சிகத்தை ஆட்டி படைத்தது . இனி நன்மைகள் தேடி வரும் காலம் . வராத பணம் தேடி வரும் முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும் ஏழரை ஆண்டுகாலமாக துன்பப்பட்டு சாவின் கடைசி நுனிவரை பார்த்து விட்டு வந்திருப்பீர்கள் .
உங்களின் துன்பங்கள் , துயரங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது . கொடுத்த கடன்கள் வசூலாகும் . பயணங்கள் வெற்றியை கொடுக்கும் . மன நிம்மதி கொடுக்கும் . உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும் . இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார் .
தனுசு
மனசாட்சிக்கு பயந்து நடந்து மற்றவர்களுக்கும் உதவக்கூடிய தனுசு ராசி அன்பவர்களே... இதுவரை உங்கள் ராசிக்குள் ஜன்மச் சனியாக அமர்ந்து குழப்பங்களையும், தடுமாற்றங்களையும் கொடுத்து எந்த வேலையையும் முழுமையாகச் செய்யவிடாமல் அலையவைத்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உங்கள் ராசியை விட்டு விலகி பாதச்சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார்.
இனி வற்றிய பணப்பை நிரம்பும். அலைப்பாய்ந்த மனசு இனி அமைதியாகும். அவசரப்பட்டு முடிவுகளெடுத்து சில பிரச்னைகளில் சிக்கித் தவித்தீர்களே... இனி அனுபவப்பூர்வமாக யோசிப்பீர்கள்
சனிப்பெயர்ச்சியால் அதிகம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள் கொஞ்சம் பெருமூச்சு விட்டுக்கலாம் . காரணம் ஜென்ம சனி விலகுது அதே நேரத்தில் ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை .
தன வருமானமும் லாபமும் கிடைக்கும் . சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு , எட்டாம் வீடு , பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம் . எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் ஒரு கை பார்த்துடுவோமே என்ற தெம்பு வந்து விடும் .
மகரம்
தன் கருத்தில் உறுதியாகவும் அதே வேளையில் மனசாட்சிக்கு பயந்தும் நடக்கும் மகர ராசி அன்பர்களே... இதுவரை உங்கள் ராசிக்கு 12 - ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்காக செலவுகளையும், அலைச்சல்களையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உங்கள் ராசிக்குள்ளேயே வந்து ஜன்ம சனியாக அமர்கிறார்.
ஜன்ம சனி என்ன செய்யப் போகிறதோ... என்றெல்லாம் புலம்பித் தவிக்காதீர்கள். உங்களின் ராசிநாதனான சனிபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே ஆட்சிப் பெற்று அமர்வதால் அனைத்து வசதிகளை அள்ளித்தருவார். பணவரவையும் அதிகரிப்பார்.
இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி தொடங்குகிறது . சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் . முதல் சுற்றில் உள்ளவர்களுக்கு ஜென்ம சனி மன அழுத்தம் , தடுமாற்றங்களை தருவார் . வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை தருவார் . அனுபவங்களினால் பக்குவப்படுத்துவார் .
இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாக கடந்து விடுவீர்கள் . கடினமாக உழைப்பீர்கள் , பொறுப்பு அதிகரிக்கும் . உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள் . 30 வயதிற்கு மேற்பட்ட சிலர் தொழில் தொடங்குவீர்கள் . கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும் . தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள் . அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும் .
கும்பம்
இழப்பு, ஏமாற்றம், தோல்வி, துக்கம் வந்தாலும் ஏற்றுக் கொண்டு மாற்றம் இல்லாமல் எப்போதும் ஒன்றுபோல் நடந்துகொள்ளும் கும்ப ராசி அன்பர்களே...
இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு பணப்புழக்கத்தையும், எதையும் முடித்துக் காட்டும் வல்லமையையும் தந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் விரைய சனியாக அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாக வருகிறார்.
ஏழரைச்சனியாக இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். இதுவரை லாப வீட்டில் நின்றிருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு எதையும் தரவில்லை. ஆனால் இப்போது உங்கள் ராசிநாதன் சனிபகவான் ஆட்சி பெற்று அமர்வதால் தடைப்பட்டுக் கொண்டிருந்த பல காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள். ஏழரைச் சனி தொடங்குகிறதே... என்று பதற வேண்டாம்.
சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 12 , 1 , 2 ஆம் வீடுகளில் இருப்பது ஏழரை சனி காலமாகும் . முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி . 2020 ஆம் ஆண்டு முதல் கும்பம் ராசிக்கு விரைய சனியாக ஏழரை சனி தொடங்குகிறது . இந்த கால கட்டத்தில் பணத்தை பணமாக வைத்திருக்காமல் சொத்துக்களில் முதலீடு செய்யலாம் .
விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி . காரணம் சனி பகவான் உங்க ஆட்சிநாதன் . சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம் சுப விரையத்திற்கு செலவு பண்ணுங்க . அப்படி செலவு பண்ணாம சேர்த்து வைத்தால் தேவையில்லாத செலவு வரும் என்பதால் சொத்துக்களாக வாங்கி முதலீடு செய்வது நல்லது .
மீனம்
எதையிழந்தாலும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்காது உழைக்கும் மீனராசிக்காரர்களே... ஆன்மிக ஈடுபாடும் இறைவழிபாடும் கஷ்டமான சூழ்நிலையிலிருந்து எப்போதும் காக்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் நீங்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு 10 - ம் வீட்டில் அமர்ந்து உத்தியோகத்தில் பிரச்னைகளையும், புதிய முயற்சிகளில் முட்டுக்கட்டையையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலகட்டத்தில் லாப வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும்.
இதுவரை எந்த வேலையை எடுத்தாலும் முழு மன நிறைவுடன் முடிக்கமுடியாத நிலை இருந்ததே... உழைப்பு உங்களுடையது. பாராட்டும், பயனும் மற்றொருவருக்கு போய் சேர்ந்தது. வேலைப்பளுவால் எல்லோரிடமும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக் கெட்ட பெயர் எடுத்தீர்கள். நிரந்தரமாக எதிலும் வருமானம் கிடைக்காமல் தவித்தீர்கள். அடுத்தடுத்து வருத்தம் தரும் செய்திகள் வந்து கொண்டு இருந்தது.
லாப சனி காலமாகும் . செய்யும் தொழிலில் லாபமும் , அபரிமிதமான வருமானமும் கிடைக்கும் . சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம் . திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் . உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும் . சிலர் விமானம் ஏறி வெளிநாடு செல்வீர்கள் . அந்நிய தேசத்து வருமானம் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் .
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
ஓம் நமசிவாய