குழந்தைகள் நல்வாழ்வில் தமிழகத்திற்கு சிறப்பிடம்


 


குழந்தைகள் நல்வாழ்வு குறியீட்டில் தமிழகம் சிறப்பிடம் பெற்றுள்ளது மத்திய அரசுடன் இணைந்து 'வேல்டு விஷன் ஆப் இந்தியா' அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

'வேல்டு விஷன் இந்தியா' என்ற அமைப்பு மத்திய அரசுடன் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.


குழந்தைகளின் ஆரோக்கியம் கல்வி புத்திக்கூர்மை இறப்பு ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆய்வு நடந்தது.


இதன்படி ஒட்டுமொத்த நலவாழ்வு குறியீட்டில் கேரளா, தமிழகம், பஞ்சாப், இமாச்சல், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் சிறப்பிடம் பெற்று முன்னிலையில் உள்ளன.

அதேநேரத்தில் ஒடிசா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்கள் குறைவான மதிப்பெண்களை பெற்று உள்ளன.


குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து கிடைப்பதில் நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் மாநிலங்கள் சிறப்பான நிலையில் உள்ளன.


குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து கிடைப்பதில் மத்திய பிரதேசம், ஜார்கண்ட், உத்தர பிரதேசம் மாநிலங்கள் குறைவான மதிப் பெண்களை பெற்று உள் ளன.


குழந்தைகளின் கற்பனை சிந்தனை கல்வி ஆகியவற்றில் சண்டிகர், இமாச்சல், டில்லி, கேரளா மாநிலங்களின் மாவட்டங்கள் அதிக மதிப்பெண்களை பெற்று உள்ளன.


இதுபோன்ற பல்வேறு தரவுகள் புள்ளி விபரங்கள் அடிப்படையில் அறிக்கையாக வெளியிடப்பட்டு உள்ளன.


இந்த அறிக்கை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மத்திய மாநில அரசுகளின் குழந்தைகள் நலம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவோருக்கு பயன்படும் வகையில் உள்ளது.