சென்னை திருவல்லிக்கேணி மன்றோ சிலை அருகே 2 பைக்குகள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த திருவொற்றியூரைச் சேர்ந்த ரூபன்ராஜ்(22) என்பவர் உயிரிழந்தார். விபத்தில் பலத்த காயம் அடைந்த தனுஷ்(23) என்பவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
________________________________
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அடையாளம் தெரியாத ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வள்ளல் பாரி தெருவில் நிகழ்ந்த கொலை குறித்து நேரில் பார்த்தவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
___________________________________
ஆரணி புதுகாமூர் ரோடு பகுதியில் சமையல் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்த விபத்து 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். வீடு இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கியுள்ள 5 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
____________________________________
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,249 கன அடியில் இருந்து 6,407 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.09 அடியாகவும், நீர் இருப்பு 57.45 டிஎம்சி-யாகவும் இருக்கிறது. அணையில் இருந்து பாசனத்தேவைக்காக டெல்டாவுக்கு 3,000 கிழக்கு, மேற்கு கலவைக்கு 800 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
________________________________________
கோவில்பட்டி அருகே அழகப்புரம் பகுதியில் மதுபோதையில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக அண்ணன் செல்லப்பாண்டியை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி முத்துப்பாண்டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
____________________________________
ஐதராபாத் கூகட்டுப்பள்ளியில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர்.