கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா மரணம் – அர்ஜெண்டினாவில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து அணியின் சிறந்த வீரராக கருதப்படும் அர்ஜென்டாவின் கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா அவர்கள் உடல்நல குறைவால் ஏற்கனவே மூளை இரத்தக்கசிவுக்காக அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
60 வயதாகும் இவர், தற்பொழுது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி, எங்களை புகழின் உச்சத்திற்கு அழைத்து சென்று மகிழ்ச்சியடைய செய்ததற்காக நன்றி என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும், இவருக்காக அர்ஜெண்டினாவில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
1986-ல் அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பையை வென்றுதந்து பெருமை சேர்த்தவர் மாரடோனா. பார்சிலோனா, நபோலி அணிகளுக்காகவும் அவர் விளையாடியுள்ளார். அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணிக்கும் வெகு காலம் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
அர்ஜென்டினாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் மாரடோனாவுக்கு ரசிகர்கள் உண்டு. பிரேசிலுக்கு பீலே, அர்ஜென்டினாவுக்கு மாரடோனா என கால்பந்து களத்தில் கொடிகட்டிப் பறந்தவர்
கால்பந்து விளையாட்டில் அவருக்கு நிகர் அவரே. 2000-ம் ஆண்டில், மாரடோனாவை நூற்றாண்டின் கால்பந்து வீரராக ஃபிஃபாவால் (சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு) அங்கீகரித்தது.
இந்தியாவில், குறிப்பாக மேற்குவங்கம், கேரள மாநிலங்களில் மாரடோனாவுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு.
மாரடோனா மறைவுக்கு ட்விட்டரில் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "அந்த ஜாம்பவான் நம்மைவிட்டு மறைந்தார்.
அவர் ஒரு வித்தைக்காரர். அவர் தான் கால்பந்து ஏன் அழகிய விளையாட்டு என்றழைக்கப்படுகிறது என்பதற்கு அர்த்தம் கற்பித்தார். அவரது குடும்பத்தார், நண்பர்கள், ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல்" எனப் பதிவிட்டுள்ளார்.