அலிபாக் பகுதியை சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் அன்வை நாயக், கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்டார். அந்த தற்கொலைக்கு அர்னாப் கோஸ்வாமி, பெரோஸ் ஷேக் மற்றும் நித்தீஷ் சர்தா தான் காரணம் எனவும், அவர்கள் தனக்கு தரவேண்டிய 5.40 கோடி ரூபாய் தராததால் தற்கொலை செய்யப்போவதாக அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
இதன்காரணமாக 2018 ஆம் ஆண்டில் தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த வழக்கு 2019 ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டது. இந்த வழக்கை மும்பை போலீசார் கையில் எடுத்த நிலையில், சுஷாந்த் சிங் மற்றும் டி.ஆர்.பி. வழக்குகளை முன்வைத்து, அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, அவரை கைது செய்தனர்.
ரிபப்ளிக் டிவி எடிட்டர் அர்னாப் கோஸ்வாமியை இன்று காலை மும்பை போலீசார் அவரது வீட்டுக்குச் சென்றே கைது செய்தனர்.
இதனையடுத்து கடும் சர்ச்சைகள் மூண்டுள்ளது, அவர் தன்னை வீட்டில் போலீசார் தாக்கியதாகவும் தன் குடும்பத்தினரைத் தாக்கியதாகவும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆளும் பாஜக தரப்பில் அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
கட்டிட உள்வடிவமைப்பாளர் ஒருவர் 2018ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதற்கு இவர்தான் காரணம் என்று தற்கொலை செய்து கொண்டவரின் மகள் அளித்த புகார்களை அடுத்து அர்னாப் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் மீண்டும் ஜனநாயகத்தை வெட்கப்படுத்தியுள்ளன.அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது அப்பட்டமாக தெரிகிறது. இந்தச்செயல் அவசரநிலையை நமக்கு நினைவூட்டுகிறது.இது அவசரநிலையை நமக்கு நினைவூபடுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தன் கண்டனங்களை தெரிவிக்கும் போது, “பத்திரிகைச் சுதந்திரம் பற்றி பேசுபவர்கள் இன்று அர்னாப் கைதுக்கு எதிராக எழுந்து நிற்க வேண்டும். அப்படி நிற்கவில்லை எனில் நீங்கள் தந்திரோபாயமாக பாசிசத்தை ஆதரிப்பவர்களே.
உங்களுக்கு அர்னாபை பிடிக்காமல் இருக்கலாம், அவரை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம், அவரது இருப்பையே நீங்கள் அருவருப்பாக உணரலாம் ஆனால் அமைதி காத்தீர்கள் என்றால் அடக்கு முறைக்குத் துணை போகிறீர்கள் என்றே அர்த்தம்.
உங்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், அடுத்து நீங்களாக இருந்தால் உங்களுக்காக யார் பேசுவார்கள்?” என்று ஸ்மிருதி இரானி ஆவேசமாகப் பேசியுள்ளார்.