குழந்தை அருள் உட்பட 16 சம்பத்துகள் எனும் செல்வங்களைப் பெற முருகனின் அருளால் பெற கந்த சஷ்டி விரதம் இருப்பது அவசியம். கந்த சஷ்டி விரதம் எப்படி இருப்பது, வீட்டில் விரதம் இருக்க நினைப்பவர்கள் என்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பனவற்றைப் பார்ப்போம்...
கந்த சஷ்டி என்பது ஒவ்வொரு மாதமும் வரக்கூடியது தான். அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு பின் 6ம் நாள் சஷ்டி திதி வரும். இந்த நாளில் இருக்கும் விரதத்தை விட, கார்த்திகை மாதத்தில் வளர்பிறையில் அமாவாசைக்கு பின் வரும் பிரதமை தினத்திலிருந்து சஷ்டி வரை உள்ள 6 நாட்கள் விரதமிருக்க மிகச் சிறப்பாக நாட்கள்.
சூரனுடன் 6 நாட்கள் கடுமையாக போரிட்ட முருகப்பெருமான் கடைசியில் வெற்றி பெற்ற நாளை குறிப்பதாக அமைகிறது. இந்த 6 நாட்கள் விரதம் இருப்பது பல விசேஷ பலன்களை தரும்
சஷ்டி விரதம் இருப்பது எப்படி?
இந்த சஷ்டி விரதம் வீட்டில் அல்லது கோயிலில் இருக்கலாம். முடிந்த வரை முருகன் கோயிலில் இருப்பது விசேஷமானது. அதுவும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விரதம் இருப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது.
இந்த விரதம் இருப்பதன் மூலம் முதல் சிறப்பு பலன் குழந்தை பேறு. அதோடு நம்மிடம் இருக்கும் குறைகள் நீங்கி நன்மை சேரவும், நீங்கள் அடைய நினைக்கும் அத்தனை செல்வமும் வந்து சேர உதவும்.
வீட்டில் விரதம் இருப்பது எப்படி?
வீட்டில் விரதம் இருப்பவர்கள் காலையில் குளித்து முடித்து முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலையத்திற்கு சென்று வரலாம்.
முருகனை வழிபட சஷ்டி சிறந்த நாளாக இருந்து வருகிறது. குறிப்பாக சஷ்டி விரதம் இருந்தால் திருமண தடை அகலும். யார் யாருக்கு என்னென்ன பிரச்சனைகள் இருந்தாலும் அத்தனையும் தவிடு பொடியாக்கி வாழ்வில் முன்னேற்றம் உண்டாக்குவார். முருகனை நம்புபவர்களுக்கு தோல்வியே கிடையாது.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் விரதத்தின் போது சொல்ல வேண்டிய திருப்புகழ் பாராயணம்.
வீட்டிலேயே முருகனின் பாமாலைகளைப் பாடலாம் கந்த சஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலை படிக்கலாம்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் பயணம் தொடரும்.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ ஓம் திருச்சிற்றம்பலம்.
ஓம் சரவண பவ
நன்றி.
மோகனா செல்வராஜ்