தீபாவளி... எண்ணெய் தேய்த்து குளிக்க... புத்தாடை அணிய... நல்ல நேரம்

 



தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.


சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.


இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை,  ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது.


தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள்.


பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது


இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.


மலேசியா, சிங்கையில் வாழும் இந்தியர்களும், தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.


தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். மக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.


பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை ஆகும்.


தீபாவளி... எண்ணெய் தேய்த்து குளிக்க... புத்தாடை அணிய... நல்ல நேரம் இதோ...!!


தீபாவளி ஒளிநிரம்பிய விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு வழிகாட்டும் விழா. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் தீய எண்ணங்களை அழித்து நல்ல எண்ணங்களை மனதில் ஏற்படுத்த தீபாவளி சிறந்த நாளாக அமைகிறது.


அதிகாலை கங்காஸ்நானம், படபடவென வெடிக்கும் பட்டாசுகள், புத்தாடைகள், நாவில் ஊற வைக்கும் பலகாரங்கள் இவை மட்டுமின்றி செல்வ வளத்தை பெருக்கும் லட்சுமி குபேர பூஜையும் தீபாவளியின் ஸ்பெஷல் தான்.


தீபாவளி நல்ல நேரம்..!!


எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நேரம்


அதிகாலை : 04.30 மணி முதல் 06.00 மணி வரை


புதிய ஆடை, அணிகலன்கள் அணிய உகந்த நேரம்


காலை : 06.00 மணி முதல் 07.30 மணி வரை


காலை : 10.30 மணி முதல் 12.00 மணி வரை


லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்


அதிகாலை : 03.00 மணி முதல் 06.00 மணி வரை


காலை : 10.30 மணி முதல் 12.00 மணி வரை


பிற்பகல் : 12.00 மணி முதல் 01.00 மணி வரை


மாலை : 05.00 மணி முதல் 07.30 மணி வரை


இரவு : 9.00 மணி முதல் 10.00 மணி வரை


மேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு.மற்றபல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது Festival of Lights என்று அறியப்படுகின்றது



தீபாவளி வழிபாடுகள் :


லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாள் தீபாவளி திருநாள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜையை செய்யலாம். இந்த பூஜையை செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.


தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக சிறப்பு வாய்ந்தது. குபேர பகவானுக்காக செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை.


 தீபாவளி நன்னாள் முதற்கொண்டு வறுமையும், பசிப்பிணியும் விலகி நம் இல்லமும், உள்ளமும் மகிழ்வுற அன்னபூரணியை மனதார வழிபட வேண்டும்.


தீபாவளித் திருநாளில் நரகாசுரனை அழிக்க காரணமான கிருஷ்ணரை வழிபட வேண்டும். வீட்டில் செய்த பண்டங்களை கிருஷ்ணருக்கு நிவேதனமாகப் படைக்க வேண்டும்.


 தீபாவளி அன்று குலதெய்வ கோவிலிற்கு சென்று வாருங்கள்.


 தீபாவளி நாளில் கேதார கௌரி விரதம் இருந்து வழிபட்டால் மனை தோஷங்கள் நீங்கும். வீட்டில் பொன், பொருள் சேரும். வீடு, நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும்.


தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய்தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.


தீபாவளியன்று காலையிலும், மாலையிலும் பூஜையறையில் அவசியம் விளக்கேற்றி வழிபாடு செய்தல் வேண்டும்.


தீபாவளி அன்று நாம் செய்ய வேண்டியவை :


புத்தாடைகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு அணிந்துகொள்ள வேண்டும். பெற்றோரிடமும், வீட்டுப் பெரியோர்களிடமும் ஆசீர்வாதம் பெறுதல் சிறந்தது.


 தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகும். புண்ணியம் உண்டாகும்.



பட்டாசு, புத்தாடை, இனிப்பு கார வகைகள் என்று அன்றைய நாள் முழுக்க மகிழ்ச்சியும், குதூகலமும் இல்லங்களிலும், நம் உள்ளங்களிலும் வழிந்தோடும்.


தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள்



இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் பயணம் தொடரும்.


தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்  திருச்சிற்றம்பலம்.


நன்றி. 


மோகனா  செல்வராஜ்