கொத்தமல்லி இலை, விதைகள் மற்றும் எண்ணெய்- மருத்துவப் பலன்கள்

 



கொத்தமல்லியின் மருத்துவ நலன்களை அறிவதற்கு முன், கொத்தமல்லி தொடர்பான முக்கிய விஷயங்களை அறிந்து கொள்வது நல்லது:


கொத்தமல்லி, மாங்கனீசு, இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவற்றை கொண்டுள்ளது. வயிற்று வலி, ஹெர்னியா, வயிற்றுப்போக்கு, வாயு, பசியின்மை ஆகியவற்றை மாங்கனீசு போக்க கூடியது.


பல் வலி, மூட்டு வலி, கிருமிகள் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நோய் ஆகியவற்றை குணமாக்க கூடியதாகவும் இது இருக்கிறது.


பால் சுரப்பதை அதிகமாக்கும் என்பதால், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களாலும் இது எடுத்துக்கொள்ளப்படுகிறது. உணவு நச்சில் இருந்தும் இது காக்கும்.


கொத்தமல்லி, தழை, விதை மற்றும் எண்ணெய் என பலவிதங்களில் பயம்படுத்தப்படுகிறது. கொத்தமல்லி பலவித மருதுகளில் பயன்படுத்தப்படுவதோடு, சோப் உள்ளிட்ட அழகு சாதனப்பொருட்களில் நறுமணத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.


 1) கொத்தமல்லி, தீங்கான கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
 2)உங்கள் ஜீரண அமைப்புக்கு உகந்தது மற்றும் கல்லீரல் செயல்பாட்டிற்கு உதவக்கூடியது என்பதால், இது பல்வேறு உணவு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. மலம் வெளியேற்றத்திலும் இது உதவுகிறது.
 3)இது இன்சுலின் சுரப்பை ஊக்குவித்து, இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
 4)அல்சைமர் நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவும் வைட்டமின் கே இதில் உள்ளது.
 5)நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறது.
 6) பல்வேறு நோய்களில் இருந்து காக்கும், ஆண்டி ஆக்சிடெண்ட்களை அதிகம் கொண்டுள்ளது. மூட்டு வலியில் இருந்து காக்கிறது.  
 7)இதன் புண் எதிர்க்கும் தன்மை வாய் புற்றுநோயை குணமாக்கும்.


8)கண்கள் சார்ந்த பிரச்சினை மற்றும் நோய்களை தடுக்கிறது. காஞன்ச்டிவிடிஸ் நோய்க்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
9)  மாதவிலக்கு வெளிப்பாட்டை சீராக்க கொத்தமல்லி விதை சிறந்த மருந்தாக அமைகிறது.
10)இது நினைவுத்திறனை அதிகமாக்கி, நரம்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது.  
 11)அனிமீயா பாதிப்பு இருந்தால் உணவில் கொத்தமல்லி சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அனீமியாவை குணமாக்க தேவையான இரும்புச்சத்தி இதில் அதிகம் உள்ளது.  


கொத்தமல்லி தழையின் மருத்துவப் பலன்கள்


கொத்தமல்லி இரத்த சர்க்கரை அளவை குறைத்து, ஒரு சில ஒட்டுண்ணிகளையும் அழிக்ககிறது. இந்தியாவில், தனியா என்றும் குறிப்பிடப்படும், கொத்தமல்லி, உலகம் முழுவதும் பலவித உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகள்,விதைகள் மற்றும் எண்ணெய் உணவுக்கு நறுமணம் அளிக்கிறது


சரும நோய்களுக்கு சிகிச்சை


இந்த ஆரோக்கியமான இலை, உங்கள் சருமத்தை பூஞ்சை தாக்குதல், உலர்தன்மை மற்றும் அரிப்பில் இருந்து காக்க கூடிய, புண்களுக்கு எதிரான, பூஞ்சைகளுக்கு எதிரான மற்றும் நச்சு நீக்கும், ஆண்டிஆகிசிடெண்ட் தன்மைகளை பெற்றுள்ளது.


வாய் துர்நாற்றம்


கொத்தமல்லியை உட்கொள்வதன் மூலம் வாய் துர்நாற்றம் விலகும். இதற்காக ஒரு சிலர் கொத்தமல்லி விதைகளை வாயில் போட்டு மெல்வது உண்டு.


வலுவான எலும்புகள்


தங்கள் எலும்புகளின் நலனை காக்க விரும்புகிறவர்களுக்கு ஏற்ற வகையில், கொத்தமல்லி கால்சியம் சத்து அதிகம் கொண்டுள்ளது. எலும்பு வளர்ச்சியில் மற்றும் ஆஸ்டோபோரோசிஸ் தடுப்பில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது.


வாயுத் தொல்லை


கொத்தமல்லி எண்ணெய், மிகை வாயுவை அகற்றுவதாக கருதப்படுகிறது. வாயுத்தொல்லை உள்ளவர்கள்  இரண்டு விதமாக அவதிப்படுகின்றனர். வாய் மேல் பக்கம் செல்வதை கவனிக்காமல் விட்டால் ஆபத்தாக முடியலாம். இது மரணத்திற்கும் வழிவகுக்கலாம். இதற்கு ஒரு கொத்தமல்லி எண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டால் போதுமானது.


பாலியல் இச்சை


கொத்தமல்லில் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்துவதாக கருதப்படுவதால், ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. 


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின்  மருத்துவ பயணம் தொடரும்.


தொகுப்பு


மோகனா செல்வராஜ்