பி.வாசு மகள் திருமணம் : சிவாஜி குடும்பத்தினர் பங்கேற்பு

 



நடிகர் திலகம் சிவாஜியின் தனிப்பட்ட மேக்அப்மேனாக இருந்தவர் பீதாம்பரம்.


அவரது மகன் தான் இயக்குனர் பி.வாசு.


சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த மன்னன், சந்திரமுகி என்ற பிரமாண்ட வெற்றி படங்களை இயக்கியவர் பி.வாசு.


இதனால் இரண்டு குடும்பங்களும் பாரம்பரியாமாக நெருக்கமாக இருந்து வருகிறது. அதனால் தான் பி.வாசு மகள் திருமணத்தில் கொரோனா காலத்திலும் சிவாஜி குடும்பம் நேரடியாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியது.


பி.வாசு மகள் அபிராமிக்கும், ஐ.ஏ.எஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனின் மகன் பொன்சுந்தருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அந்த திருமணம் நேற்று சென்னை அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் காலை 9 மணிக்கு நடந்தது. அதே ஓட்டலில் மாலை 6 மணிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.


இதில் சிவாஜி குடும்பத்தை சேர்ந்த நடிகர் பிரபு, அவரது மனைவி, ராம்குமார் அவரது மனைவி, மகன் துஷ்யந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நடிகை குஷ்பு தனது மகளுடன் கலந்து கொண்டார். தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டார். இவர்கள் தவிர திரையுலக முன்னணியினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.