மேலும் செய்திகள்


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளார். சேனனியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.


-------------------------------------------------------------


தீபாவளியையொட்டி பூக்களின் விலை கடுமையாயக உயர்ந்துள்ளது. தோவாளை  பூ சந்தையில் பூக்களின் விலை 6 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 1 கிலோ ரூ.200கு விற்கப்பட்ட மல்லிகை பூ தற்போது ரூ.1200க்கு விறபனையாகிறது. ஒரு கிலோ பிச்சி கிலோ ரூ.1,000, ரோஜா ரூ.280க்கும்  விற்பனையாகிறது.


-----------------------------------------------


பஹ்ரைன் நாட்டின் பிரதமராக  50 ஆண்டு பதவி வகித்தவர் இளவரசா் காலிஃபா பின் சல்மான் அல் காலிஃபா ( 84). இவர் உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவா்.


இந்நிலையில், அமெரிக்காவில் உடல் நலக் குறைவால்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.  இதனால், இளவரசர் சல்மான் பின் ஹமீத் அல் கலீஃபா பஹ்ரைன் நாட்டின் பிரதமராக பதவியை ஏற்றுக் கொண்டார்.


------------------------------------------------------------


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.


இதற்கு இடையில்   7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் இந்த தீர்மானத்துக்கு  தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் வந்துள்ளதாக மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 


--------------------------------


பஞ்சாபில் ரயில்களை மீண்டும் இயக்கபோவதில்லை என ரயில்வே மையம் தெரிவித்துள்ளது.


புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் மற்றும் மக்கள் போராட்டத்தால் பஞ்சாப்  வழியாக  செல்லும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது.


இதற்கிடையில், பஞ்சாப் அரசு ஒப்புக் கொண்டதை அடுத்து, ரயில்களை நிபந்தனையுடன் மீண்டும் தொடங்குவதில்லை என்று ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் பாதைகளில் எந்த சிக்கலும் இல்லை என்று மாநில அரசு முழுமையான உத்தரவாதம் அளிக்கும் வரை ரயில்களை இயக்கபோவதில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.