டெல்லியில் கொரோனா அதிகமாவதால் சென்னை விமான நிலையத்தில் வெப்ப கருவி மூலம் பயணிகளுக்கு பரிசோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவது தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. பொது மக்களிடம் விழிப்புணர்வு பணிகளை அதிகமாக்கியதால், கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் டெல்லியில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏற்கனவே டெல்லியில் காற்றுமாசு அதிகம் ஏற்படுவதால், அதனால் பலர் பாதிக்கப்படும் நிலையில் தற்போது கொரோனா தொற்றும் அதிகமாக பரவுவதால் பக்கத்து மாநிலங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் இருந்து தினமும் 3,000-க்கும் அதிகமானோர் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் சென்னை விமான நிலையத்தில் பிற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக பரிசோதித்து அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் வேகமாக குறைந்துள்ளது. ஆனாலும் சுகாதாரத்துறையினர் காய்ச்சல் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஒரே தெருவில் 3 பேருக்கு காய்ச்சல் வந்தாலோ அல்லது ஆஸ்பத்திரிகளில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புறநோயாளியாக வந்து சென்றாலு