மாநில அரசுடன் மோதல்.. மகளுக்கு பதவி.. "அந்த" 4 விஷயங்கள்.. விசாரணை வலையில் அண்ணா. பல்கலை சூரப்பாஅண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பாவை விசாரிக்க தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைக்க 4 முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.
அண்ணா பல்கலை துணை வேந்தர் சூரப்பாவிற்கு எதிரான புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இன்னும் 3 மாதங்களில் இந்த குழு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும். சூரப்பா தமிழக அரசுக்கும், பல்கலை எதிர்காலத்திற்கும் எதிராக செயல்பட்டாரா என்று விசாரணை செய்யப்படும்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் இருந்து சூரப்பாவை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விசாரணை நடக்கிறது
தமிழக அரசுக்கு எதிராக அரியர்ஸ் தேர்வு விவாகரத்தில் இவர் செயல்பட்டது தான் முதல் பிரச்சனையாக மாறியது.
தமிழக அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்திடம் இருந்து எனக்கு மெயில் வந்தது, என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
பல்கலைக்கு தேவையான 1000+ கோடி நிதியை நாங்களே திரட்டிக்கொள்கிறோம், மாநில அரசின் தயவு தேவை இல்லை என்று இவர் கடிதம் எழுதி இருந்தார்.
அதன்படி பல்கலைக்குள் தனது மகளுக்கு சூரப்பா பதவி வழங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது.
இதெல்லாம் போக நான்காவதாக, அண்ணா பல்கலையில் கடந்த ஆன்லைன் தேர்வை தனியார் நிறுவனம் மூலம் நடத்தி, அதில் பண மோசடி செய்துவிட்டார் என்றும் புகார் வைக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இதைத்தான் தற்போது விசாரணை குழு விசாரணை செய்ய உள்ளது.