குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோக்கள் எடுத்த ஜுனியர் பொறியாளரை சிபிஐ கைது செய்துள்ளது



50 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோக்கள் எடுத்த ஜுனியர் பொறியாளரை சிபிஐ கைது செய்துள்ளது.


கடந்த 10 ஆண்டுகளாக குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களின் ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருபவர் ராம் பவன் .


இவர் உத்திரப்பிரதேச மாநிலத்தின் நீர்ப்பாசன துறைக்கான ஜூனியர் பொறியாளராக உள்ளவர் .இவர் பண்டா ,சித்ரகூட் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள 5 முதல் 16 வயதுக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.


அதனுடன் அந்த குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை மொபைல், மடிக்கணினி உள்ளிட்ட மின்னனு சாதனங்களை பயன்படுத்தி பதிவு செய்து அதனை டார்க் நெட்டில் வெளியிடும் இவரை செவ்வாயன்று மத்திய புலனாய்வு துறையால்(சிபிஐ) பண்டாவில் வைத்து கைது செய்தனர் .


அப்போது குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து ரூ.8 லட்சம் , மொபைல் போன்கள், மடிக்கணினிகள், வெப் கேமரா ,பென் டிரைவ்கள், மெமரி கார்டுகள் மற்றும் பல செக்ஸ் பொம்மைகள் உள்ளிட்ட பல மின்னணு உபகரணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்