தீபாவளி பண்டிகையை கொண்டாடுபவர்கள், தங்களது வீடுகளில் பலகாரம் செய்வது வழக்கம்.
தீபாவளிக்கு பலகாரம் வீட்டிலேயே தயாரிக்கப் போறீங்களா? உங்களுக்காக கொஞ்சம் டிப்ஸ்
1.பலகாரம் செய்வதற்கு அரிசி வாங்கும்போது ஐ.ஆர்.20 பச்சரிசி என்று கேட்டு வாங்குங்கள். பலகாரம் சுவையாகவும் மென்மையாகவும் வரும்.
2.அதிரசம், முறுக்கு போன்றவற்றுக்கு முழு தானியங்களையும், சீப்பு சீடை, மாவுருண்டை போன்றவற்றுக்கு அரைத்த மாவையும் அளவீடுகளாகக் கொள்ள வேண்டும்.
3.மாவு மில்லில் அரைக்கும்போது அரை கிலோ அரிசியை கொடுத்து அரைத்து வாங்கிக்கொண்டு, பின் நம் பொருள்களை அரைத்தால் கலப்படமில்லாத மாவு கிடைக்கும்.
4. மாவு அரைத்த அன்றே பலகாரம் செய்யாவிடில் நன்கு ஆறவைத்து அகலமான பாத்திரத்தில் போட்டு துணியால் மூடி ஃபிரிட்ஜில் வைத்தால் ஓரிரு நாள்களுக்கு மாவு நன்றாகவே இருக்கும் (அதிரசத்துக்கு இது பொருந்தாது).
5. எல்லா வகை மாவையுமே ஃபைன் பவுடர் அல்லது ஃபைன் பேஸ்ட் ஆக மட்டுமே தயாரித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எண்ணெயில் பொரிக்கும்போது வெடிக்காமல் இருக்கும்.
6. முறுக்கு, ரிப்பன் பக்கோடா தயாரிக்கும்போது மாவை பகுதிகளாகப் பிரித்து பிசைந்துகொண்டால் பலகாரம் இறுதிவரை எண்ணெய் குடிக்காமல் வரும்.
7. பிசைந்த மாவை சிறிது சிறிதாக எடுத்து பயன்படுத்தும்போது மாவு பாத்திரத்தை மூடி வைத்துக்கொள்ள வேண்டும்.
8. எண்ணெய்க் காய்ச்சல், பலகாரத்துக்குப் பலகாரம் மாறுபடும். அதிரசம், குலாப்ஜாமூன் போன்றவற்றுக்கு எண்ணெய் மிதமாகக் காய வேண்டும்.
9. இயன்றவரை டால்டா, செயற்கை நிறமூட்டி, ஆப்பசோடா போன்றவற்றைத் தவிர்க்கவும். இவை இல்லாமலேயே பலகாரங்களை சுவையாகத் தயாரிக்க முடியும்.
10. சுட்ட அதிரசங்களை சேகரித்துவைக்கும்போது, டப்பாவின் அடியில் கிச்சன் டிஷ்யூஸ் வைத்து, அதன்மீது அதிரசங்களை அடுக்கினால் உபரி எண்ணெயை டிஷ்யூ பேப்பர் இழுத்துக்கொள்ளும். சுவையும் மாறாமல் இருக்கும்.
முத்தாய்ப்பாக ஒரு குறிப்பு. பலகாரங்கள் ஒரு வாரம், பத்து நாட்களுக்குள் தீரும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அந்த அளவுக்கே தயாரியுங்கள்.
தீபாவளி வாழ்த்துகள்
வணக்கம் அன்புடன் கார்த்திகா