எல்லாரும் நம்முடன் திட்டத்தின் வாயிலாக-பெருமளவில் தி.மு.க.,வில் உறுப்பினர்

 



'எல்லாரும் நம்முடன் திட்டத்தின் வாயிலாக, 20 லட்சத்திற்கும் மேலானவர்கள், தி.மு.க.,வில் உறுப்பினர்களாகி உள்ளனர்' என, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வீடியோ பதிவில் ஸ்டாலின் பேசியதாவது: 'எல்லாரும் நம்முடன்' என்ற திட்டத்தின் வாயிலாக, 20 லட்சத்திற்கும் மேலானவர்கள், தி.மு.க.,வில், உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.


இளைஞர்களும், பெண்களும் பெருமளவில், கட்சியில் இணைந்துள்ளது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.


மேலும் ஒரு அறிக்கையில், 'துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்த அப்பாவி மக்களில், 13 பேரை சுட்டுக் கொன்று விட்டு, நான், 'டிவி'யில் தான் அதைப் பார்த்தேன் என, முதல்வர் பழனிசாமி அபாண்டமாக பொய் பேசுவதை தவிர்க்க வேண்டும்' என்றார்.