விகாரி வருடம் 2019ல் பெயர்ச்சியான குரு பகவான் போது தனுசு ராசியில் சஞ்சரித்து வருகிறார்.
தற்போது சார்வரி வருட குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் தனுசு ராசியில் உள்ள உத்திராடம் 1ம் பாதத்திலிருந்து மகரத்தில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 2ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி குரு ஐப்பசி 30 (நவம்பர் 15) ஞாயிறு அன்றும், திருக்கணித பஞ்சாங்க முறைப்படி கார்த்திகை 5 (நவம்பர் 20) வெள்ளிக்கிழமை அன்று பெயர்ச்சி ஆக உள்ளார்.
இதில் குருவின் சிறப்பு பார்வையான 2, 5, 7, 9, 11 ஆகிய பார்வை அருளால் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலனை அளிப்பார்.மேஷம், மிதுனம்,சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்தால் தான் சுமாரான பலனைப் பெற முடியும்
சிம்மம் ராசி
ராசிக்கு 6ம் இடத்தில் குரு அமர்வதால் சற்று கவனமாக இருக்க வேண்டிய நிலை இருக்கும். நோய், எதிரி ஸ்தானம் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். உணவு விசயத்தில் கவனமாக இருப்பதோடு, வெளி உணவுகளை தவிர்க்கவும்.
எதிர்பாராத செலவுகள், அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையலாம்.
செலவுகள் அதிகமாக இருந்தாலும், அதற்கேற்ற வருமானம் இருக்கும். கடன் தொல்லை குறையும். அதே சமயம் எந்த ஒரு முதலீடு செய்வதற்கு முன் நல்ல ஆலோசனை தேவை. முடிந்த வரை முதலீடு வேண்டாம். கடன் கொடுத்தால் திரும்ப வருவது சந்தேகமே. குருவின் பாரவையால் எதிரிகள் கட்டுக்குள் இருப்பார்கள்.
வழிபாடு :
ஞாயிறு தோறும் சூரிய போற்றி, ஆதித்திய கவசம் பாடி சூரிய பகவானை வழிபடவும்.
வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.
கன்னி ராசி
ராசிக்கு குரு பகவான் 5ம் இடமான பூர்வ, புண்ணிய குருவாக வருவது மிக சிறந்த அதிர்ஷ்டத்தை அளிப்பதாக இருக்கும்.
குருவின் 5ம் பார்வை பலனால் நீங்கள் எடுத்த காரியங்கள் வெற்றி தரும். இதுவரை இருந்த இக்கட்டான சூழல் மாறும். உங்களின் பெரிய இலக்கை அடைவதற்கான மிக உன்னத காலம். குரு 5ம் இடத்தில் இருக்கும் அமைப்பை சரியாக திட்டமிட்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இருப்பினும் குரு அதிசாரமாக ஏப்ரல் மாதம் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
வழிபாடு :
வியாழக்கிழமைகளில் சித்தர்கள், மகான்கள் ஆலயத்திற்கு சென்று வரவும்.
நவகிரக குருவை வணங்கி வாருங்கள்.
துலாம் ராசி
துலாம் ராசிக்கு 4ம் இடமான சுகஸ்தான குருவாக சஞ்சரிக்க உள்ளார். உங்களின் சுகமான வாழ்க்கை சற்று சிக்கலுக்கு உள்ளாகும். அதாவது உங்கள் குடும்ப அமைதியில் சலசலப்பு ஏற்படும். விட்டுக் கொடுத்து செல்வதும், அன்பை மறக்காமல் பரப்புவதால் மட்டும் சுமூகமான சூழல் நிகழும்.
தொழில், உத்தியோகஸ்தர்கள் கவனமாக செயல்படுவது அவசியம். எந்த முடிவெடுக்கும் போது சிந்தித்து செயல்படுங்கள். இருப்பினும் உங்களின் விடாமுயற்சிக்கு சிறப்பான பலனும், முன்னேற்றமும் கிடைக்கும்.
பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம். ஆரோக்கியம், குடும்ப பிரச்னைக்கு வழிவகுக்கும். புதிய முயற்சிகளில் கவனமாக செயல்படுவது நல்லது.
வழிபாடு :
மகாலட்சுமியை வணங்கி வருவதும், வியாழக்கிழமைகளில் குரு பகவானை வழிபடுவது நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
விருச்சிகம் ராசி
இந்த குரு பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். அதாவது உங்கள் செயல்பாடுகளில் பல தடங்கள், மன வேதனை தந்தாலும், உங்களுக்கு கிடைக்க வேண்டிய வெற்றியும், மன மகிழ்வும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
ராசிக்கு 3ம் இடமான தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு அமர்வதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் விடாமுயற்சி இருக்கும். கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த சிக்கல்கள் நீங்கி நன்மையைப் பெறலாம்.
உங்களின் புது முயற்சிகள், திட்டங்கள் வெற்றி அடையும். சிலருக்கு அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டிய நிலை இருக்கும். பொருளாதாரத்தில் எந்த சிக்கலும் இருக்காது. மேலும் கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும்.
இளைய சகோதரர் உறவில் கவனம் தேவை. கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.
வழிபாடு :
செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோயிலுக்கு சென்று வருவதும்.
செவ்வாய் கிழமைகளில் முருகன் கோயிலுக்கு சென்று அவரின் ஆசி பெறுவதால் பொருளாதாரத்தில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.