தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மார்ச் மாதம் 2வது வாரத்தில் இருந்து மூடப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தில் பள்ளிகள் கொரோனா காரணமாக திறக்கப்படாத நிலையில் , புதிய கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் நவம்பர் 16-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்தது.
அத்துடன் வரும் 16ம் தேதி முதல் அனைத்துக் கல்லூரிகள், கல்வி நிலையங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் பள்ளி - கல்லூரிகளை, வருகிற 16 ஆம் தேதி திறக்க எதிர்ப்பு தெரிவித்த, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து பரிசீலிக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை - புளியந்தோப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தான் தமிழகத்தில் தற்போது உள்ளது என்றார்.
பாஜகவின் வேல் யாத்திரை குறித்த கேள்விக்கு, சமத்துவத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில், யார் செயல்பட்டாலும் பாரபட்சமின்றி இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படும் என அவர் பதிலளித்தா