மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறி 12 ஆண்டுகள் (26.11.2008) நிறைவடைந்தும் அதில் தொடர்புடைய லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் 19 பேரை பாகிஸ்தான் அரசு இதுவரை கைது செய்யவில்லை.
மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் 2008 நவ. 26ல் பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டன.
அதில் 166 பேர் உயிரிழந்தனர்; 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய ஒன்பது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
மேலும் உயிருடன் பிடிக்கப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாபிற்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அந்த தாக்குதல் சம்பவம் நடந்து(26.11.2020) நேற்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்தன.
எனினும் அந்த தாக்குதலுக்கு பின்னணியாக செயல்பட்ட லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் 19 பேர் பாகிஸ்தானில் உள்ளனர். இவர்களில் ஒரு சிலரை மட்டும் கைது செய்துள்ளதாக பெயரளவுக்கு பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது. மற்றவர்கள் சுதந்திரமாக உலா வருகின்றனர்.
அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாகிஸ்தான் அரசு காலம் தாழ்த்துவது இந்தியா மட்டுமல்லாமல் பயங்கரவாத்தால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளுக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.