ஆலங்குளம் எம்எல்ஏ பூங்கோதை ஆலடிஅருணா- மருத்துவமனையில் அனுமதி

 



ஆலங்குளம்  எம்எல்ஏ பூங்கோதை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா. இவர் ஆலங்குளத்தில் தங்கி கட்சி பணிகளில்  தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர், மருத்துவரான பூங்கோதை ஆலடிஅருணா. தென்காசி மாவட்ட தி.மு.க-வில் பல்வேறு கோஷ்டிகள் செயல்பட்டு வரும் நிலையில், எந்த அணியிலும் சேராமல் தனித்துச் செயல்பட்டு வருபவர்.


தென்காசி மாவட்ட தி.மு.க செயலாளரான சிவபத்மநாதனுக்கும் பூங்கோதைக்கும் எப்போதுமே ஒத்துப் போகாது. அதனால் தனது தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் கட்சி சார்பாக நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு மாவட்டச் செயலாளரை அழைப்பதில்லை.



பூங்கோதை தன் தம்பி எழில்வாணனுடன் சில வருடங்களாகப் பேசிக் கொள்வதில்லை. அதனால் எழில்வாணன், மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதனுடன் சேர்ந்து பூங்கோதையை எதிர்த்து ஆலங்குளம் தொகுதிக்குள் அரசியல் செய்து வந்தார்


ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட கடையம் பகுதியில் நேற்று (18-ம் தேதி) கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது


கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர்கள் அவரை மேடையில் அமர அனுமதிக்காததால், மேடையின் எதிரில் பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அவரது ஆதரவாளர்கள் இதுபற்றி கூட்ட ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.



அந்தச் சமயத்தில் கடையம் ஒன்றிய நிர்வாகிகள் சிலர் அவரை கூட்டத்தை விட்டு வெளியே செல்லுமாறு கோஷமிட்டுள்ளனர். அதனால், அவமானம் அடைந்த அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார். இது தொடர்பாக அவர் கட்சி மேலிடத்திலும் புகார் செய்துள்ளார்


இந்நிலையில்  உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை 8.30 மணிக்கு நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனை  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் திருநெல்வேலி சந்திப்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் மயங்கிய நிலையில் பூங்கோதை நேற்று காலை அனுமதிக்கப்பட்டார். அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


இதையடுத்து திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், அவை தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான   மு.அப்பாவு உள்ளிட்ட நிர்வாகிகள், மருத்துவமனைக்கு சென்று பூங்கோதையின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.


இதுதொடர்பாக, அப்பாவு கூறும்போது, ``பூங்கோதை காலையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று மயங்கியுள்ளார்.


உடனே அவரை திருநெல்வேலியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் நல்லநிலையில் உள்ளார். அவர் தற்கொலைக்கு முயன்றதாக வதந்தி பரப்பப்பட்டுவிட்டது. அதில் எதுவுமே உண்மையில்லை என்று தெரிவித்தார்.


அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவ இயக்குநர் முகம்மது அராபத் வெளியிட்ட அறிக்கையில், பூங்கோதை எம்எல்ஏ சுயநினைவு இல்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். தற்போது அவர் உடல் நிலை திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.