செய்திகள் 

 



மாலை நேரச் செய்திகள் 


👉 தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புதுவை அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.


👉 புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 


________________________________


திருவண்ணாமலையில் தொடர்ந்து 8-வது முறையாக பௌர்ணமி கிரிவலத்துக்கு தடை நீடிக்கிறது.


---------------------------


👉 டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக, சுற்றுச்சுழல் அமைச்சகத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.


------------------------------


👉 வாரிசு என்ற அடையாள அட்டையை கொண்டு அதிமுகவில் பதவி தருவது கிடையாது என்று மதுரையில் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கூறியுள்ளார்.


----------------------------------


👉 இந்தியாவின் எரிபொருள் தேவை வருங்காலங்களில் இரட்டிப்பாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


------------------------------------


👉 அக்டோபர் 29-ம் தேதி முதல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி 7-வது கட்டமாக தொடங்க உள்ளது.


----------------------------------------


👉 பெரியாரின் சிலையை அவமதிக்கிற வன்முறை வெறியாட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


----------------------------------------


👉 மனு நீதி என்று கூறப்படும் மனுஸ்மிருதி நு}ல் குறித்து தமிழக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நவம்பர் 3, 4, 5-ம் தேதிகளில் மகளிர் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும் என விசிக தலைவர் தொல்.திருமாவளன் அறிவித்துள்ளார்.


-------------------------------------------


👉 அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 


---------------------------------------------------


👉 சசிகலா விடுதலைப்பற்றி இன்னும் 2 நாட்களில் தெரிய வரும் என்று வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


----------------------------------------------------