தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சில தினங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லுவைத் திருமணம் செய்யவுள்ளதைக் காஜல் அகர்வால் உறுதி செய்தார்.
கொரோனா காலம் என்பதால் வீட்டு உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் எளிய முறையில் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே திருமணத்திற்கு முன்னர் வீட்டில் நடைபெறும் பூஜைகள், மெகந்தி வைத்தல் என திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார் நடிகை காஜல் அகர்வால்.
இந்தநிலையில், இன்று மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கவுதம் கிச்லு - காஜல் அகர்வால் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்தாலும் தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்துவேன் என்று காஜல் அகர்வால் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.