நாவில் கரையும் காசி அல்வா

நாவில் கரையும் காசி அல்வா! அப்படியே சாப்பிடலாம்.



பூசணியைக்கொண்டு செய்யப்படும் காசி அல்வாவை பிடிக்கவில்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள்


காசி அல்வா இந்த இனிப்பு பெரும்பாலான விழாக்களிலும், விருந்துகளிலும் பரிமாறப்படும் சுவைமிகுந்த இனிப்புப் பண்டமாகும்..


இது வெள்ளை பூசணிக்காயில் தயாரிக்கப்படுகிறது.1 வாரம் முதல் 10 நாட்கள் வரை கெடாதிருக்கும் .


நகர்ப்புறங்களில் பூசணியை உணவில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.


சிறிது வெந்தாலே வடிவம் குலைந்து கரைந்துபோகும் அதன் சுவை பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.


ஆனால் பூசணியைக் கொண்டு செய்யப்படும் காசி அல்வாவை பிடிக்கவில்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள்


காசி அல்வா செய்யத் தேவையான பொருட்கள்:



துருவிய வெள்ளைப் பூசணி – ஒரு கப்
சர்க்கரை, பால் – தலா 2 கப்
நெய் – 50 கிராம்,
கலர் – சிறிதளவு
முந்திரிப்பருப்பு – 10.


செய்முறை :


முதலில் பூசணித் துருவலை தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவும்.


அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை விட்டு, பூசணி துருவலை சேர்த்தும், நன்றாக வேக விடவும்.


வெந்ததும் மசித்து சர்க்கரை சேர்க்கவும்.


அதன் பின் பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் நெய் விட்டு, கலர், முந்திரிப்பருப்பு சேர்த்து இறக்கவும்.


இப்போது சுவையான காசி (பூசணி)  அல்வா ரெடி


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன் கார்த்திகா