மதுரையில் இருந்து குமரிக்கு 3 மணி நேரத்தில் வந்த சிறுநீரகம்

 



மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகத்துடன், ஆம்புலன்ஸ் ஒன்று மதுரையில் இருந்து, நாகர்கோவிலுக்கு, மூன்று மணி நேரத்தில் வந்து சேர்ந்தது.


மதுரையை சேர்ந்த இளைஞர் வேல்முருகன், 27; விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு ஏற்பட்டது. இதனால், இவரது உறுப்புகளை தானம் செய்ய, அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.


குமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த ஒருவர், சிறுநீரகத்துக்காக பதிவு செய்திருந்ததால், அவருக்கு சிறுநீரகம் வழங்க, முடிவு செய்யப்பட்டது.


இதற்காக, மதுரை தனியார் மருத்துவமனையில் இருந்து, சிறுநீரகத்துடன் காலை, 11:00 மணிக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டது.


மூன்று மணி நேரத்தில், 225 கி.மீ., துாரம் கடந்து, பகல், 2:00 மணிக்கு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையை அடைந்தது. தயாராக இருந்த டாக்டர் குழுவினர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.


இதற்காக, நாகர்கோவில் நகரில், ஒழுகின சேரி முதல் மருத்துவமனை வரை, சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.