கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இருந்தாலும் இன்னும் வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் அவருக்கு வெண்டிலேட்டா், எக்மோ கருவிகள் உதவியுடன் ஐசியூ பிரிவில் தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வெண்டிலேட்டரை நீக்கும் அளவுக்கு அவரது நுரையீரலில் முன்னேற்றம் இல்லை. அவர் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டார். நுரையீரல் பாதிப்பு விரைவில் குணமடைய வேண்டும்.
பொதுவாக கொரோனா வைரஸ் தொற்று நுரையீரலை அதிகமாக பாதிக்கும் என்பதால், இவருக்கும் அந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மூச்சு விடாமல் பாடிய எஸ்பிபிக்கா இன்று இந்த நிலைமை என்று வருத்தமடையச் செய்துள்ளது.