இந்தி மொழியில் பேனர் - விவசாயிகள் அதிர்ச்சி


புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் இந்தி மொழி இருந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.


வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் அடையாளம் என்பதை விட்டுவிட்டு ஒரே மொழியைத் திணிக்க மத்திய பா.ஜ.க அரசு தமிழகத்தில் தொடர்ந்து முயன்று வருகிறது.




இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியில் பேனர் வைக்கப் பட்டிருந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தியிலும் ”புதுக்கோட்டை” என எழுதி வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை எழுந்துள்ளது.



இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே மாவட்டத்தின் பெயர் எழுதப்பட்டு வந்த நிலையில் முதன்முறையாக இந்தியிலும் மாவட்டத்தின் பெயர் எழுதப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.