ஆன்மிக தகவல்கள்

ஆன்மிக தகவல்கள்


கணவர், மனைவியின் பேச்சை கேட்காமல் இருக்க, மனைவியின் தலைமுடியும் ஒரு காரணம்! சாஸ்திரம் என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சுக்கலாமா.


சாஸ்திரத்திற்கும், கணவர், மனைவியின் பேச்சை கேட்காமல் இருப்பதற்கும், தலை முடிக்கும், என்ன சம்பந்தம்? என்ற குழப்பம் கட்டாயம் எல்லோரது மனதிலும் வந்திருக்கும்.



சம்மந்தமே இல்லாமல், எதையுமே நம் முன்னோர்கள், சொல்ல மாட்டார்கள் என்பதை இந்த பதிவின் இறுதியில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.


சாஸ்திரப்படி பெண்களின் தலைமுடி எப்படி இருக்கக்கூடாது, என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.


சாஸ்திர சம்பிரதாயங்களில், நம்பிக்கையுள்ள பெண்கள் மட்டும் இதை படித்தால் போதும். சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாத பெண்கள் இதைப் படிக்க வேண்டாம்.


சம்பிரதாயங்களே இல்லை என்று சொல்லுபவர்களுக்கு, இந்த பதிவு கிடையவே கிடையாது.


பொதுவாகவே, மெல்லிய தன்மை கொண்ட பொருட்களை எல்லாம், கேதுவின் அம்சம் என்று தான் சொல்லுவார்கள்.


அந்த வரிசையில், பெண்களின் தலைமுடி மெல்லியதாகவும், நீளமாகவும் கயிறு போன்று தான் இருக்கின்றது.


ஆகவே, கேதுவின் அம்சம் கொண்ட இந்த தலை முடியை பெண்கள் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும். 


முதலில், பெண்கள் தலை சீவும் போது நேர் வகுடு எடுத்து, தலை சீவ வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.



திருமணமான பெண்கள், அந்த வகுட்டில் கட்டாயம், குங்குமத்தை தினம்தோறும் வைக்கும் பட்சத்தில் நவக்கிரகத் தால், எந்த ஒரு பிரச்சனையும் அந்தக் குடும்பத்திற்கும் ஏற்படாது.


அதாவது பெண்களுடைய தலைப்பகுதி சூரிய பகவானை குறிக்கின்றது. நெற்றி செவ்வாய், பகவானையும் புதன் பகவானையும் குறிப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.


அந்தந்த கிரகங்கள் சரியாக செயல்பட வேண்டும் என்றால், அந்தந்த பகுதிற்குரிய, சாஸ்திரங்களை நாம் கடைபிடித்து தானே ஆக வேண்டும்.


சில வீடுகளில், கணவன் மனைவி பிரச்சினை என்பது அதிகமாக இருக்கும்.


கணவன், மனைவி சொல்கின்ற பேச்சை கேட்காமல் இருப்பதற்கு, மனைவியின் தலை முடியும் ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது.


அதாவது, கேதுவின் அம்சமாக சொல்லப்படும், ஒரு பெண்ணினுடைய தலைமுடி, அவளின் இடுப்புக்குக் கீழே, வளர்ந்து இருக்கக்கூடாது.


பெண்களின் தலைமுடி, அளவுக்கு அதிகமாக, நீளமாக இருந்தால், அந்த இடத்தில் கேதுவின் ஆதிக்கம் அதிகமாகி விடும்.


ஆகவே இல்லறத்தில் கட்டாயம் பிரச்சனை ஏற்படும். இடுப்புக்கு கீழே முடி வளர்ந்து இருக்கும் பட்சத்தில், அந்தப் பெண்ணிற்கு இல்லற வாழ்க்கையில் பற்று இருக்காது என்றும் சொல்லப்பட்டுள்ளது.


இதன் மூலமாகக் கூட தம்பதியர்களுக்கு, வீட்டில் பிரச்சனை வரும் என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.


ஆகவே, இடுப்புக்கு கீழ் முடி வளர்ந்திருந்தால் அதை வெட்டி விடுவது நல்லது. (இனி, நீங்கள் அளவுக்கு அதிகமாக, நீளமாக முடி இருக்கும் பெண்களை கவனித்து பாருங்கள்.


அவர்களுடைய இல்லற வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று) அடுத்ததாக, தலைவிரி கோலத்தோடு இருக்கும் பெண்களுக்கும் இல்லற வாழ்க்கையின் அதிகப்படியான பிரச்சனைகள் ஏற்படும்.



தலைவிரி கோலம் என்றாலே, சன்யாசத்தை குறிப்பதுதான். எதன் மீதும் பற்று இல்லாதவர்களாக இருப்பார்களாம்.


இதனால் தான், பெண்கள், தலைவிரி கோலமாக இருக்கக்கூடாது என்றும் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.


பெண்கள் என்றாலே, நேர் வகுடு எடுத்து, திருமணமான பெண்ணாக இருந்தால், வகுட்டில் குங்குமப்பொட்டு வைத்து, நெற்றியில் குங்குமத்தோடு, சேர்ந்த பொட்டு வைத்து, தலையை சீவி, பின்னி, பூவைச் சூடிக் கொள்வது தான் சரியான முறை.


இந்த முறையை பின்பற்றும் பெண்களின் பேச்சை, கட்டாயம் கணவர் தட்டவே மாட்டார். இல்லை.


இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை! என்று சொல்லுபவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. 


இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றாலும், குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், மனைவி சொல்கின்ற பேச்சை, கணவர் தட்டாமல் கேட்க வேண்டும் என்றாலும், வீட்டுப் பெண்கள் கட்டாயம் மேற்குறிப்பிட்டுள்ள முறையைப் பின்பற்றுவது, நிரந்தர தீர்வாக இருக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


நன்றி. 


அன்புடன் பிரியா