உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் 26/06/2020


போதைப்பொருள்கள் போதை ஏற்றிக்கொள்வதற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் மக்களால் உட்கொள்ளப்படுகின்றன. போதைப்பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும் சமூக நலத்திற்கும் பெறும் ஊறு விளைவிக்கும் பிரச்சனையாகும். இதனால் தனிமனிதன், , சமுதாயம் என பல வகைகளிலும் பாதிப்புகள் ஏற்படறன.


ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் மற்றும் சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம் ஆகியவை கடைப்பிடிக்கப்படுகின்றன.


உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 45 கோடிப் பேர் போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.


மது மற்றும் புகையிலைப் பொருட்களை உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், கஞ்சா, அபின், கோகைன், பிரவுன்சுகர் ஆகியவை கரையான் புற்று போல் இளைஞர் சமூகத்தை அழித்து வருகின்றன.


போதைப் பொருட்களில் மதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, பான் மசாலா, போதை தரும் இன்ஹேலர்கள் என பல வகைகள் அடங்கும்.


புகையிலையைப் புகைத்துப் பழக்கப்பட்டவர்கள் அப் பழக்கத்துக்கே அடிமையாகி விடுவர்.இதனைப் பயன்படுத்தும் முறையையும், அளவையும் பொறுத்து மனித உடலில் இது ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கது.



புகைத்தல் காலப்போக்கில், வாய், தொண்டை, நுரையீரல் ஆகிய பகுதிகளில் பெருமளவு புற்று நோயைத் தூண்டும் பொருட்களைப் படியச் செய்கிறது


எத்தனால் என்பது எரிநறா அல்லது வெறியம் என்னும் வகையைச் சார்ந்த ஒரு வேதிச் சேர்மம்.  மதுபானங்களில் பொதுவாகக் கலந்திருக்கும் 


காஃவீன் என்பது சில செடிகொடிகளில் உள்ள மனிதர்களுக்கு ஒரு புத்துணர்வூட்டும் (விறுவிறுப்பூட்டும்) ஒரு போதைப் பொருள். இது காப்பியில் இருப்பதை முதலில் உணர்ந்ததால் இதற்கு காஃவீன் என்று இத்தாலிய மொழிவழி இப்பெயர் ஏற்பட்டது.


தேயிலைச் செடியில் இருந்து பெறுவதை தேயீன் (theine) என்றும், குவாரான் என்னும் செடியில் இருந்து பெறுவதை குவாரைன் (guaranine) என்றும், யெர்பா மேட் என்னும் செடிப்பொருளில் இருந்து பெறுவதை மேட்டீன்(mateine) என்றும் கூறுவது வழக்கம்.


கஞ்சாவில் சில வர்க்கங்கள் போதையூட்டும் பொருட்களாகவும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றது. இதில் காணப்படும் வேதிப்பொருளான THC (Δ9- tetrahydrocannabinol), இவ்வியல்புக்குக் காரணமாகும். சிவகை என அழைக்கப்படும் கஞ்சா பக்தி கலந்த போதையை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது.


கோகோயின் என்பது கோகோ தாவர இலைகளில் இருந்து பெறப்படும் ஒரு பளிங்குரு கொண்ட டிரோபேன் அல்கலாய்டு ஆகும். “கோகோ” என்ற பெயருடன் சேர்ந்து அல்கலாய்டு துணைப் பெயரான -ine என்பது சேர்ந்து கோகோயின் என்ற வார்த்தையை உருவாக்குகிறது.


இது மத்திய நரம்பு மண்டலத்தின் கிளர்ச்சியூட்டியாக இருப்பதுடன் பசி அடக்கியாகவும் செயல்படுகிறது. குறிப்பாக, இது ஒரு செரோடோனின்-நோரெபினிஃப்ரைன்-டோபமைன் மறுஉறிஞ்சல் தடுப்பான் ஆகும்,


உலகளாவிய ரீதியில் போதைப் பொருள் பயன்படுத்துதல், போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை செய்தல் என்பன ஒரு முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.


போதைப் பொருளைக் கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போதைப் பொருள் கடத்தலுக்காக சில அரசுகள் மரண தண்டனையைக்கூடச் சட்டமாகப் பிரயோகித்து வருகின்றது


வேடிக்கை விளையாட்டு மகிழ்ச்சியாக தொடங்கிய மது மற்றும் போதை பழக்கம் மெல்ல மெல்ல பழகி அடிமைத்தனமாகி விடுகிறது. இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அந்தப் போதைப் பொருள் இல்லாமல் இருக்க முடியாது. உடலில் ஏற்படுகின்ற இரசாயன மாற்றத்தினால் போதைப் பொருட்களினை உபயோகிக்கின்ற அளவும் கூடி விடுகிறது. இதனால் எப்பொழுதும் போதைப் பொருட்களை உபயோகிப்பது குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பர். போதையால் மாறிப்போன வாழ்க்கை பல குடும்பங்களை சின்னா பின்னமாகிச் சீரழித்துக் கொண்டு இருப்பதை நாம் தினசரி செய்திகளில் படித்துக் கொண்டே இருக்கிறோம்.


போதை பழக்கம் முதலில் சாதாரணப் பழக்கமாகத்தான் ஆரம்பிக்கும். முதலில் பீர் உடம்புக்கு நல்லது என சமாதானம் கூறிக்கொண்டு தான் இந்த பழக்கம் ஆரம்பிக்கும். ஆரம்பிக்கும்போதே யாரும் முழு பாட்டிலையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங்கள் அல்லது வருடங்களில் மூளையில் ஆல்கஹால் சில ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக்கூட அதிக அளவு மது தேவைப்படும். இதனால்தான் ஆரம்பித்துச் சில வருடங்களில் பாட்டில் கணக்கில் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் குடியை விட முடியாத அளவுக்கு மனநோயாளியாகவே மாறி விடுகிறார்கள்.


பெரும்பாலும் குடிப்பவர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களை கேட்டால் நீங்கள் குடிப்பதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்வார்கள்.


கூலி வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் உடல் வலியைப் போக்கக் குடிப்பதாகவும், இளம் வயதினரைக் கேட்டால் நண்பர்கள் கட்டாயப்படுத்துவதால் அல்லது ஜாலி மூடில் இருந்ததால் குடிப்பதாகவும், சிலர் கவலையை மறக்கக் குடிப்பதாகவும் காரணம் சொல்வார்கள்.


இப்படிப்பட்ட பல்வேறு சாக்குப்போக்குகள் தான் நாளடைவில் குடியைத் தொடர்வதற்குக் காரணமாகிவிடும். காதல் தோல்வி, குடும்பத்தில் பிரச்னை, வேலையின்மை, குடிப்பது ஓர் நாகரீகம் ,வெளிநாட்டு வாழ்க்கையில் தோன்றும் மன அழுத்தம், கடன் சுமை பல 


பார்ட்டிகளில் குடித்தல் நாகரீகம் என்று சொல்லிக் பிடிக்காதவர்களையும் குடிக்க வைப்பது, பின்னர் அவர்களில் பலருக்கு அதுவே குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது.


சில பேருக்கு ஏற்படும் சூழ்நிலைகள் காரணமாக இந்த போதைப் பழக்கத்திற்கு ஆளாகி விடுகின்றனர். மேலும் இந்த போதை வஸ்துக்கள் மிகவும் எளிதாகக் கிடைப்பதுவும் ஒரு காரணம். நண்பர்களின் வற்புறுத்தல், தன்னுடைய தனிப்பட்ட ஆர்வம் இதில் என்ன இருக்கின்றது என்கின்ற எண்ணம் போன்றவற்றினால் இப்பழக்கத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.


போதை பழக்கத்தால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. மனதளவில் தளர்ச்சி அடைதல், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல பாதிப்புகளைச் சந்திக்கக் கூடிய நிலை ஏற்படுதல் மூலமாக மன அழுத்தம் ஏற்பட்டு உடலையும், மனதினையும் பாதிக்கிறது.


போதை பழக்கம் வராமல் தடுக்கவும், குடிக்கின்ற எண்ணங்கள் வராமல் இருக்கும் சில மருந்துகள் உள்ளன. இந்த வகையான மருந்துகளை எடுத்த பின்பு குடித்தாலும் வாந்தி, குமட்டல் போன்றவற்றினை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் உள்ளன. இவற்றினை நோயாளிகளுக்கு தெரிந்தோ, தெரியாமலோ டீ,காபி போன்றவற்றில் கலந்து கொடுக்கலாம். என்னதான் சிகிச்சை முறைகள் இருந்தாலும் அதற்கு நோயாளியின் ஒத்துழைப்பு அவசியம் தேவை.


அடுத்தவர் பேச்சைக் கேட்டுக் குடிக்காதீர்கள், குடிப்பவராக இருந்தால் இனியாவது குடியை நிறுத்துங்கள். சிறிதளவில் குடிப்பவர் தனது குடியை உடனடியாக நிறுத்த முடியும். ஆனால் குடிக்கு அடிமையானவர் அப்படி ஒரு நாளில் நிறுத்துவது ஆபத்து. சிலருக்குப் பாதிப்பை தராவிட்டாலும் பலருக்கு பாதிப்பைத் தரும். எனவே, குறைத்துக் குறைத்து கொண்டு வந்து நிறுத்துவது நல்லது


பள்ளிகளிலும்  கல்லூரிகளிலும்  மாணவ  சமுதாயத்திற்கு  மனதில்  பதியும் படி  மாதம் ஒரு முறையாவது  செமினார்  மூலம்  போதைப்பொருள்களினால்  ஏற்படும்  தீமைகளை விளக்கி  சமுதாயத்தை காப்போம்



நாம் அனைவரும்  இந்த சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தில்   சூளுரை ஏற்போம்


போதையை  ஒழிப்போம்  இளைஞர்  நலம் காப்போம் 


வணக்கம்   நன்றி 


தொகுப்பு   : மோகனா  செல்வராஜ்